அதிமுக ஆட்சியில் காவல்துறை கண்ணியத்தை இழந்து வருகிறது – கமல்ஹாசன்
அதிமுக ஆட்சியில் காவல்துறை கண்ணியத்தை இழந்து வருகிறது என்று மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ஓமலூருக்கு அருகே இரவு 10 மணிக்கு மேல் திறந்து இருந்த டீக்கடையை அடித்து நொறுக்குகிறார் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் என்றும் இதே காரணம் சொல்லித்தான் ஜெயராஜையும் பென்னிக்ஸையும் அடித்தே கொன்றார்கள் எனவும் கூறிய கமல், அதிமுக ஆட்சியில் காவல்துறை கண்ணியத்தை இழந்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
ஓமலூருக்கருகே இரவு 10 மணிக்கு மேல் திறந்து இருந்த டீக்கடையை அடித்து நொறுக்குகிறார் போக்குவரத்து இன்ஸ்பெக்டர். இதே காரணம் சொல்லித்தான் ஜெயராஜையும் பென்னிக்ஸையும் அடித்தே கொன்றார்கள். அதிமுக ஆட்சியில் காவல்துறை கண்ணியத்தை இழந்து வருகிறது.
— Kamal Haasan (@ikamalhaasan) March 10, 2021