சென்னை வரும் சசிகலாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்த போலீஸ் அனுமதி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் கடந்த ஜனவரி 27-ம் தேதி சிறையில் இருந்து சசிகலா விடுதலை செய்யப்பட்டார். கொரோனா உறுதியானதால் பெங்களூர் விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலா கொரோனா சிகிக்சை பெற்று வந்தநிலையில், கடந்த 31-ம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதைத்தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சசிகலா பெங்களூர் புறநகர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டிற்கு தன்னை தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
நாளை மறுநாள் காலை தமிழகம் வரவுள்ளதாக சசிகலாவை வரவேற்று சென்னையில் பேரணி நடத்த அனுமதி கோரி முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளருமான செந்தமிழன் அனுமதி கேட்டு சென்னை காவல் ஆணையரிடம் மனு கொடுத்தார். அதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை.
இந்நிலையில், டிடிவி தினகரன் வெளியிட்டள்ள அறிக்கையில், தமிழக எல்லையான அத்திப்பள்ளி முதல் சென்னை இல்லம் வரை ராணுவ கட்டுப்பாட்டோடு சாலையின் இருமருங்கிலும் திரண்டு நின்று நம்முடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்திட வேண்டும். போக்குவரத்துக்கோ, பொதுமக்களுக்கோ எந்தவித இடையூறும் இல்லாத வகையில் அதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.
கொரோனா தடுப்பு விதிமுறைகளையும் முறைப்படி கடைப்பிடித்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். சென்னை உள்ளிட்ட இடங்களில் சசிகலாவிற்கு நாம் அளிக்கும் வரவேற்பு ஏற்பாடுகளுக்கு காவல்துறை நமக்கு அனுமதி அளித்திருக்கிறது. காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து சசிகலா தமிழகம் வருகிற நாளை ஒட்டுமொத்த தமிழக மக்கள் மகிழ்ந்து கொண்டாடுகிற நாளாக மாற்றி விடுவோம் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…
சென்னை: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் கடந்த ஆண்டு (2023) டிச. 28இல் காலமானார். அவர் மறைந்து இன்றுடன் ஓராண்டு ஆகிறது.…
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதி ஊர்வலம் டெல்லியில் தொடங்கியது. மோதிலால் நேரு தெருவில் உள்ள அவரது…