ஆன்லைன் கடன் பெறும் செயலி குறித்து காவல்துறை எச்சரிக்கை.!

ஆன்லைன் லோன் ஆப் மோசடி சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
அங்கீகாரம் இல்லாத ஆன்லைன் கடன் சேவைகளில் கடன் பெறுவது மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும், அங்கீகாரம் இல்லாத கடன் செயலிகள் மீது பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அங்கீகாரமற்ற கடன் செயலிகள் மூலம் பலர் கடன் வாங்கி பாதிப்புக்குள்ளாகி வருவதால் இதையடுத்து ஆர்பிஐ இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
அந்த வகையில், ஆன்லைன் லோன் ஆப் மோசடி குறித்து சென்னை காவல்துறை ஒரு அறிக்கை ஒன்றை வெளிட்டுள்ளது. அதில், கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் 60 ஆன்லைன் கடன் அப்ளிகேஷன்களுமே ரிசர்வ் வங்கியால் NBFC ஆக பதிவு செய்யப்படவில்லை. எனவே இந்த லோன் App-களின் செயல்பாடுகள் அங்கீகரிக்கப்படாதவைகள்.
இந்த அப்ளிகேஷன்கள் உபயோகிப்பவர்களின் கைபேசியின் எல்லா தனியுரிமையை மீறும் வகையில் அவை பயன்படுத்துகின்றன. தகவல்களையும் சேகரித்து, உபயோகிப்பவர்களின் பொதுமக்கள் கடன் அடிப்படையிலான இத்தகைய அப்ளிகேஷன்களை பயன்படுத்த வேண்டாம் என்று பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொதுமக்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்கள், ஆதார் அல்லது வங்கி விவரங்களை மேற்படி பதிவு பெறாத, முறைப்படுத்தப்படாத அப்ளிகேஷன்களில் கொடுக்க வேண்டாம்.
உங்களின் அனைத்து தொலைபேசி தொடர்புகள். புகைப்படங்கள், கேமரா இருப்பிடங்கள் மற்றும் தொலைபேசி நினைவகம் ஆகியவை இந்த பணக் கடன் வழங்குநர்களால் சமரசம் செய்யப்படும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கவும் என கேட்டு கொண்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025