#Breaking:ஹெலிகாப்டர் விபத்து – விசாரணை அதிகாரி நியமணம்!
ஹெலிகாப்டர் விபத்து வழக்கின் விசாரணை அதிகாரியாக போலீஸ் ஏடிஎஸ்பி முத்துமாணிக்கம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
குன்னூர் அருகே நேற்று நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில்,அதில் பயணித்த 14 பேரில் முப்படைத் தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.மேலும்,கேப்டன் வருண் 80 சதவிகித காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து,ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர் அருள்ரத்தினா என்பவரின் புகாரின்பேரில் போலீசார் 174 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ஹெலிகாப்டர் விபத்து குறித்த வழக்கின் விசாரணை அதிகாரியாக போலீஸ் ஏடிஎஸ்பி முத்துமாணிக்கம் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.