தமிழகம் முழுவதும் போலீசார் பல ரவுடிகளை கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் குற்றங்களை தடுக்கும் விதமாக பல பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீட்டில் போலீசார் ரெய்டு நடத்தினர்.மேலும்,நள்ளிரவில் ரவுடிகளிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.டிஜிபி சைலேந்திர பாபு அவர்களின் உத்தரவின் பேரில் ரவுடிகளின் அராஜகத்தை ஒடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி,சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள சுமார் 50 ரவுடிகளின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.துணை ஆணையர் ராஜேஸ் கண்ணா தலைமையில் நடந்த இந்த சோதனையில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் பல கைப்பற்றப்பட்டன.
மேலும்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரத்தில்-79 ரவுடிகள்,திண்டுக்கல்லில்-44, சிவகங்கை-37,திருவள்ளூரில்-45, பெரம்பலூரில்-6,புதுக்கோட்டையில்-13 என பல்வேறு மாவட்டங்களில் உள்ள ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோல,கன்னியாக்குமரியில் நன்னடத்தை விதிகளை மீறிய 39 ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.இதனைத் தொடர்ந்து, நெல்லையில்-37,தென்காசியில்-73,திருவாரூரில்-8,தஞ்சையில்-62 என பலப்பகுதிகளில் ரவுடிகளை பிடித்து சென்று போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் மேற்கொண்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபடாமல் இருக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை : தமிழக சட்டப்பேரவை கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…
லக்னோ : பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…
சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…
டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…
சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…
சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…