விஷச் சாராய வழக்கு – 11 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி!
மரக்காணம் விஷச் சாராய வழக்கில் சிறையில் உள்ள 11 பேரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடிக்கு அனுமதி.
விழுப்புரம் மரக்காணம் அருகே விஷச் சாராயம் குடித்து 14 பேர் பலியான விவகாரத்தில், 12 பேர் மீது சிபிசிஐடி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்திருந்தனர். இதில், மரக்காணத்தை சேர்ந்த அமரன், ரவி, முத்து ஆறுமுகம், ரசாயன நிறுவன உரிமையாளர் இளையநம்பி உட்பட 12 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த 12 பேரில் மதன் என்பவர் தவிர மற்ற 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சமயத்தில், விஷச் சாராயம் வழக்கில் 11 காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில், மரக்காணம் விஷச் சாராய வழக்கில் சிறையில் உள்ள 11 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறைக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இவ்வழக்கு சிபிசிஐடி நிலையில், கொலை வழக்காக பதிவு செய்து 2 நாட்களாக விசாரணை நடைபெற்று வருகிறது.