அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை -அருந்ததிராயின் புத்தகம் நீக்கம் தொடர்பாக கவிஞர் வைரமுத்து.!

அருந்ததிராயின் புத்தகம் நீக்கம் தொடர்பாக அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை என்று கவிஞர் வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்தில் இருந்த எழுத்தாளர் அருந்ததிராய் அவர்களின் ” Walking with the Comrades” புத்தகம் நீக்கப்பட்டுள்ளது. ஏ.பி.வி.பி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் அருந்ததிராய் எழுதிய இந்த புத்தகமானது பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்படுவதாக முடிவெடுக்கப்பட்டது. ஏனெனில் இந்த புத்தகத்தில் நக்சலைட் குறித்த சர்ச்சையான கருத்துக்கள் இடம் பெற்றுள்ளது. அதன்படி, எம்.ஏ இலக்கிய பாடத்தில் இடம் பெற்றிருந்த அருந்ததிராய் எழுதிய ‘walking with comrades’ என்ற புத்தகம் நீக்கப்பட்டது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இது குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் அருந்ததிராய் படைப்பு நீக்கப்பட்டதை கண்டிக்கிறேன் . அறிவுத்துறையை அரசியல் சூழ்வது அறமில்லை .சாளரத்தை மூடிவிட்டால் காற்றின் வீச்சு நிற்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளார் .
மனோன்மணியம் சுந்தரனார்
பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில்
அருந்ததிராய் படைப்பு
நீக்கப்பட்டதைக் கண்டிக்கிறேன்.அறிவுத்துறையை அரசியல்
சூழ்வது அறமில்லை.சாளரத்தை மூடிவிட்டால்
காற்றின் வீச்சு நிற்பதில்லை.— வைரமுத்து (@Vairamuthu) November 12, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
பத்ம பூஷன் விருதைப் பெற்றார் அஜித்குமார்!
April 28, 2025
மீண்டும் அமைச்சராகப் பதவியேற்றுக் கொண்டார் மனோ தங்கராஜ்..!
April 28, 2025