“கோலாரில் தோண்டியெடுக்கப்பட்ட மொத்தத் தங்கம்;நீரஜ் சோப்ராவின் ஒற்றை ஒலிம்பிக் தங்கம்” – கவிஞர் வைரமுத்து..!
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்றுள்ள நீரஜ் சோப்ராவிற்கு கவிஞர் வைரமுத்து அவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில்,இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்று 87.58 மீ தூரத்தில் ஈட்டியை எறிந்து தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.
இதன்காரணமாக,ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியா தனது முதல் தங்கப்பதக்கத்தை நேற்று வென்றுள்ளது.டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் அரங்கத்தில் இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.இவ்வாறு,உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை தலைநிமிரச் செய்த நீரஜ் சோப்ராவை பிரதமர்,குடியரசுத்தலைவர் உட்பட அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில்,கவிஞர் வைரமுத்து அவர்கள்,ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:
“கோலாரில் தோண்டியெடுக்கப்பட்ட மொத்தத் தங்கத்திற்கும் மேலானது இந்த ஒற்றை ஒலிம்பிக் தங்கம் இந்திய தேசியக்கொடியை ஒலிம்பிக்கில் உயர்த்திப்பிடித்த நீரஜ்! உங்களுக்கு எங்கள் வீர வாழ்த்து”,என்று தெரிவித்துள்ளார்.
கோலாரில் தோண்டியெடுக்கப்பட்ட
மொத்தத் தங்கத்திற்கும் மேலானது
இந்த
ஒற்றை ஒலிம்பிக் தங்கம்இந்திய தேசியக்கொடியை
ஒலிம்பிக்கில் உயர்த்திப்பிடித்த
நீரஜ்!
உங்களுக்கு எங்கள்
வீர வாழ்த்து#NeerajGoldChopra #Olympics2020 pic.twitter.com/4R8hVQopjP— வைரமுத்து (@Vairamuthu) August 8, 2021