PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்களை தொடர்ந்து தட கள பயிற்சியாளர் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு..!

Default Image

PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்களை தொடர்ந்து தட கள பயிற்சியாளர்  நாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் PSBB மற்றும் மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் எழுந்தையடுத்து,இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.அதில்,PSBB பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதனையடுத்து,பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார்கள் அளிக்கலாம் என்றும்,அவர்களது பெயர், விவரம் ரகசியமாக வைக்கப்படும் என்றும்,அதன்படி,புகார் அளிக்க 94447 72222 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்றும் சென்னை பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு துணை கமிஷனர் ஜெயலட்சுமி கேட்டுக்கொண்ட நிலையில்,மாணவிகள் பலரும் சமூக ஊடகங்களின் மூலம்,தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லை குறித்த சம்பவங்களை பதிவிட்டு வருகின்றனர்.

அந்தவகையில்,சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் விளையாட்டு அகாடமியின் பயிற்சியாளர் நாகராஜன் மீதும் புகார்கள் அளிக்கப்பட்டன.

அதாவது,நாகராஜன் பயிற்சியின் போது தடகள விளையாட்டு மாணவிகள்,வீராங்கனைகளை பயிற்சியின் போது பாலியல் தொந்தரவு அளித்ததாகவும், ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசுவதும், வீராங்கனைகளின் உடலை அத்துமீறி தொடுவது உள்ளிட்ட பாலியல் தொல்லைகளை அளித்துவந்ததாக சமூகவலைதளத்தில் புகார்கள் வந்தன.
இந்நிலையில்,தற்போது தடகள பயிற்சியாளர் நாகராஜன் மீது போக்சோ உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் மீது பூக்கடை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tamil news
elon musk donald trump
mk stalin assembly NEET
empuraan - gokulam
Anand - WaqfAmendmentBill
Darshan Attacks
Tamil Nadu Police Recruitment