PM Modi : பிரதமர் மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளார். நேற்று பிற்பகல் பல்லடத்தில் நடைபெற்ற “என் மண் என் மக்கள் யாத்திரை” நிறைவு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின்னர் நேற்று மாலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் வந்தடைந்த பிரதமர் மோடி தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களை திறந்து வைத்தும், அடிக்கலும் நாட்டினார்.
அதன்படி ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே ரூ.550 கோடியில் அமைக்கப்பட்டு உள்ள புதிய ரயில்வே தூக்கு பாலத்தையும், 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டு உள்ள 75 கலங்கரை விளக்கம், 1,477 கோடியில் முடிக்கப்பட்ட வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை ஆகியவற்றை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
மேலும், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும், தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 7,055.95 கோடி மதிப்பில் துறைமுக பணிகள், 265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 மேம்பாட்டு பணிகள், 124.32 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் உள்ளிட்டவற்றுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் உடன் ஆளுநர் ஆர்.என். ரவி , மத்திய இணையமைச்சர் எல்.முருகன், அமைச்சர் எ. வ வேலு, எம்.பி கனிமொழி மற்றும் இஸ்ரோ இயக்குனர் சோம்நாத் உள்ளிட்டோர் இருந்தனர்.
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…
சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…