தமிழக நிதிநிலை அறிக்கை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையின் முன் பாமக சார்பாக நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிடப்படும். இந்நிலையில், இன்று சென்னை தியாகராய நகரில் பாமகவின் 20-வது பொது நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பாமக சார்பில் 20-வது பொது நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிட்டப்பட்டுள்ளது.
அதில்,
- தமிழ்நாட்டில் மாவட்டத்திற்கு குறைந்தபட்சம் 25 பள்ளிகள் வீதம் தமிழகம் முழுவதும் 1,000 பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக மாற்றப்படும். இந்தப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை இருக்கும்.
- பள்ளிக் கல்வித் துறைக்கு நடப்பாண்டில் ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்தப்படும். ஒவ்வொரு மாணவருக்கும் கல்வி வழங்க ஆண்டுக்கு ரூ.37,500 செலவிடப்படும்.
- சட்டம் – ஒழுங்கைப் பாதுகாக்க கண்டிப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
- சென்னை தவிர்த்த தமிழகத்தின் மற்ற பகுதிகள் 4 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு டிஜிபி நிலை அதிகாரி பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவார்.
- மயிலாடுதுறை, திருப்பத்தூர் மாவட்டங்களில் நடப்பாண்டில் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படும்.
- தமிழகத்தில் மும்மொழிக்கொள்கை அறிமுகப்படுத்தப்படாது. அதனால் இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகள் எதுவும் மாணவர்கள் மீது திணிக்கப்படாது
- தமிழ்நாட்டில் கரும்பு உற்பத்தியை ஊக்குவிக்கும் நோக்குடன் உழவர்கள் உற்பத்தி செய்யும் நாட்டுச் சர்க்கரையை ஒரு கிலோ ரூ.60 என்ற விலையில் தமிழக அரசே கொள்முதல் செய்யும்.
- மணல் குவாரிகள் திறக்கப்படாது
- வேளாண் சார்ந்த கடன்களின் தேவை அதிகரித்திருப்பதால், அவற்றை வழங்குவதற்கு வசதியாக, கூட்டுறவுச் சங்கங்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.5,000 கோடி மறுமுதலீடு வழங்கப்படும்.
- தமிழ்நாட்டில் இருந்து இடம் பெயர்ந்து சென்று உலகம் முழுவதும் சுமார் 150 நாடுகளில் வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ் கற்பிப்பதற்காக இணையவழி தமிழ் கற்பித்தல் சேவை தொடங்கப்படும். இணையதளம் தொடங்கப்பட்டு, அதன் மூலம் தமிழ் கற்பிக்கப்படும்.
- பள்ளிக் கல்வித் துறைக்கு நடப்பாண்டில் ரூ.75,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
- சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்தைவிட சிறப்பானதாக தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டம் வலுப்படுத்தப்படும்.
- தமிழக மாணவர்களுக்கு ரூ.18,000 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் வாராக்கடனின் அளவு ரூ.2,000 கோடி ஆகும். இந்தக் கடன் உடனடியாக தள்ளுபடி
- உயர்கல்வியின் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
- மதுரை எய்ம்ஸ் மருத்துவ நிறுவனத்தில் நடப்பாண்டில் 50 மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். அடுத்த ஆண்டு இது 150 இடங்களாக உயர்த்தப்படும்.
- ஆட்சியை மட்டுமே பிடிப்பது பாமகவின் நோக்கமில்லை தமிழகத்தை முன்னேற்றுவதே பாமகவின் முக்கியமான நோக்கம் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.