தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்க திட்டம்..!பா.மா.க தலைவரின் யோசனை…!

Default Image

தமிழகத்தை 3 மாநிலங்களாக பிரிக்காலம் என்ற யோசனையை பா.மா.க.தலைவர் ராமதாஸ் முன்வைத்துள்ளார்.

தமிழகம்,கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதியன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து,அசாமில் மூன்று கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாகவும் தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்குபதிவு நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து, பா.மா.க.தலைவர் ராமதாஸ் தனது ஃபேஸ் புக் பக்கத்தில் சில கருத்துகளை முன்வைத்துள்ளார்,”மேற்கு வங்கத்தின் வளர்ச்சியின்மைக்கு முக்கிய காரணம் அது மிகப்பெரிய நிலபரப்பைக் கொண்டுள்ளது.ஆகவே,மேற்கு வங்கத்தை 3 ஆக பிரித்து மேற்கு வங்கம்,காம்தாப்பூர் மற்றும் கூர்க்காலாந்து ஆகிய மாநிலங்களாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது.இத்தகைய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால்தான் மேற்கு வங்கத்தின் வளர்ச்சி சாத்தியமாகும்” என்று கூறியுள்ளார்.

மேலும்,”கடந்த 2000 வது ஆண்டில் பீகார், மத்தியப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் போன்ற மாநிலங்கள் பிரிக்கப்பட்டு ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய 3 புதிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.இந்த 3 புதிய மாநிலங்களும் அவற்றின் தாய் மாநிலங்களை விட அதி வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்றன.இதனைத் தொடர்ந்து,2014 ஆம் ஆண்டில் பிரிக்கப்பட்ட ஆந்திரா,தெலுங்கானா போன்ற மாநிலங்கள்கூட போட்டிப் போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியில் வளர்ச்சி அடைந்து வருகின்றன.

ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை, சென்னை மற்றும் கோவை ஆகிய மாவட்டத்திற்கு இணையாக மதுரையில் தொழிற்சாலைகள் பெரிய அளவில் இல்லை,ஆகவே,தென் மாவட்டங்களை தனியாகப் பிரிக்க வேண்டும்.அதுமட்டுமல்லாமல்,கொங்கு நாடு என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்று கொங்கு அமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.எனவே,தமிழகத்தை ‘சென்னை,கோவை மற்றும் மதுரை’ என 3 மாநிலங்களாகப் பிரிக்கலாம் என்றும்,மாநிலங்கள் பிரிக்கப்படுவது நல்வளர்ச்சிக்கு வழிவகுக்கும்” என்றும் ராமதாஸ் தமது கருத்துகளை முன்வைத்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்