இன்று சென்னை எழும்பூரில் ராணி மெய்யம்மை அரங்கில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் , பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுகிறதா.? கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதா.? எந்த கட்சியுடன் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கிய தீர்மானத்தை பாமக முக்கிய நிர்வாகி ஜி.கே.மணி கூறினார்.
பொதுக்குழு கூட்டம்: மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி? – பாமக இன்று முடிவு…
வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாமக கூட்டணி அமைத்து தான் போட்டியிட உள்ளது என்றும், மாநில நலன் மற்றும் மக்கள் நலன் என இரண்டிலும் அக்கறை கொண்டுள்ள கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைப்போம் எனவும், யாருடன் கூட்டணி என்பதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தான் முடிவு எடுப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக ஜி.கே.மணி பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.
2024 மக்களவை தேர்தலில் பாமக குறைந்த பட்சம் 7 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், மக்களுக்கென உழைப்பதென்று வந்துவிட்டால், வயதை பார்க்க மாட்டேன். மக்களுக்காக என் உயிரைவிடவும் தயங்கமாட்டேன் எனவும் உணர்ச்சி மிகுதியில் உரையாற்றினார்.
இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அரசு மீது பாமக தலைவர்கள் விமர்சனம் வைத்து பேசி வருவதால், பாமக, பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்பது ஓரளவுக்கு தெளிவாகிறது. அதன் காரணமாக திமுக அல்லது அதிமுக பக்கம் பாமக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் விசிக முக்கிய அங்கம் வகிப்பதால் , இந்த முறை மீண்டும் பாமக, அதிமுக பக்கம் செல்லவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…