மக்களவை தேர்தல்… கூட்டணி குறித்து முக்கிய தீர்மானங்கள்.. பாமக அறிவிப்பு.!

PMK Leader Ramadoss

இன்று சென்னை எழும்பூரில் ராணி மெய்யம்மை அரங்கில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் , பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே.மணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுகிறதா.? கூட்டணி அமைத்து போட்டியிடுகிறதா.?  எந்த கட்சியுடன் கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில்  முக்கிய தீர்மானத்தை பாமக முக்கிய நிர்வாகி ஜி.கே.மணி கூறினார்.

பொதுக்குழு கூட்டம்: மக்களவை தேர்தலில் யாருடன் கூட்டணி? – பாமக இன்று முடிவு…

வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாமக கூட்டணி அமைத்து தான் போட்டியிட உள்ளது என்றும், மாநில நலன் மற்றும் மக்கள் நலன் என இரண்டிலும் அக்கறை கொண்டுள்ள கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி வைப்போம் எனவும், யாருடன் கூட்டணி என்பதை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தான் முடிவு எடுப்பார் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இருப்பதாக ஜி.கே.மணி பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

2024 மக்களவை தேர்தலில் பாமக குறைந்த பட்சம் 7 இடங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.  இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், மக்களுக்கென உழைப்பதென்று வந்துவிட்டால், வயதை பார்க்க மாட்டேன். மக்களுக்காக என் உயிரைவிடவும் தயங்கமாட்டேன் எனவும் உணர்ச்சி மிகுதியில் உரையாற்றினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய அரசு மீது பாமக தலைவர்கள் விமர்சனம் வைத்து பேசி வருவதால், பாமக, பாஜகவுடன் கூட்டணி அமைக்காது என்பது ஓரளவுக்கு தெளிவாகிறது. அதன் காரணமாக திமுக அல்லது அதிமுக பக்கம் பாமக வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. திமுக கூட்டணியில் விசிக முக்கிய அங்கம் வகிப்பதால் , இந்த முறை மீண்டும் பாமக, அதிமுக பக்கம் செல்லவே அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்