அனைவருக்கும் சமூகநீதி சாப்பாடு வேண்டும்.! அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.! 

PMK Leader Anbumani Ramadoss

இன்று கோயம்புத்தூரில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சமூக நீதி காக்க சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கருத்தரங்கு நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு, சாதிவாரி கணக்கெடுப்பின் முக்கியத்துவத்தையும், அதனை தமிழக அரசு விரைந்து நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அவர் பேசுகையில், தமிழக மக்களுக்கு சமூகநீதி வேண்டும். எங்களுக்கு மட்டும் சமூக நீதி எனும் சாப்பாடு கிடைத்தால் போதாது. அல்லது எங்களை சார்ந்தவர்களுக்கு மட்டும் சமூகநீதி எனும் சாப்பாடு கிடைத்தால் பத்தாது. தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் சமூக நீதி எனும் சாப்பாடு கிடைக்க வேண்டும். இதுவே எங்களது விருப்பம். தமிழக அரசே விழித்துக் கொள்ளுங்கள். விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துங்கள்.

9 வருட பாஜக ஆட்சியே பெரிய பேரிடர் தான்… அமைச்சர் உதயநிதி பதிலடி.! 

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு படிப்பு, வேலைவாய்ப்பு அனைத்தும் சமமாக கிடைத்து அவர்கள் முன்னேறினால் மட்டுமே தமிழகம் முன்னேறும். இந்தியாவிலேயே சமூக நீதிக்காக குரல் கொடுத்த முதல் தலைவர் பெரியார். அவர்கள் வழியில் செயல்படும் கட்சி என திமுக கூறிக்கொண்டு இருக்கிறது.

பெரியாரின் வழியை பின்பற்றுவது திமுக என்றால் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்கு ஏன் இவ்வளவு தயக்கம்.?  பல்வேறு மாநிலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்து விட்டார்கள். ஆனால் உண்மையில் அதனை முதலில் நடத்தி இருக்க வேண்டியது தமிழகம் தான்.

பீகார் அரசுக்கு முன்னதாக கர்நாடகா அரசு சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கூறிவந்தது. அதற்கு அடுத்ததாக பீகார் அரசு சாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்து அதனை முடித்து வெளியீட்டும் விட்டது. அதனை தொடர்ந்து இடஒதுக்கீடை 50 சதவீதத்திலிருந்து 75% ஆக உயர்த்திவிட்டது. 50% சாதி வாரி கணக்கெடுப்பு இடஒதுக்கீடு இருந்தது. அதற்கு பிறகு உயர்சாதி ஏழை 10% என ,மொத்தம் 60 சதவீத இடஒதுக்கீடு இருந்தது. அதை தற்போது 75 சதவீதமாக மாறி உள்ளது. இதற்கு எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை.

பீகார் அரசுக்கு இருக்கும் தைரியம் ஏன் தமிழக அரசுக்கு இல்லை.? சமூக நீதி காக்கும் அரசு திமுக என வசனம் தான் பேசுகிறது. வரும் காலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தவறினால் திமுகவை இனி, சமூக அநீதி கட்சி என மக்கள் கூறி விடுவார்கள் என்றும் அந்த கருத்தரங்கில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்