சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என பாமக சார்பில் சட்டப்பேரவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இன்று தமிழக சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை சார்பாக கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்று வந்தன. அதில் பேசிய பாமகவை சேர்ந்த தர்மபுரி எம்எல்ஏ வெங்கடேஸ்வரன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
தமிழக வீரர்கள் இல்லை :
ஐபிஎல் தொடரில் தமிழகம் சார்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் என விளையாடி வரும் அணியில் தமிழக வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும், தமிழகத்தில் சிறந்த வீரர்கள் இருந்தும் அவர்கள் விளையாட அனுமதிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
சுய லாபம் :
தமிழக வீரர்களை ஒதுக்கிவிட்டு, சுய லாபத்திற்காக மட்டுமே தமிழக அணி போல விளம்பரப்படுத்தி தமிழர்களிடம் இருந்து அதிக லாபம் சம்பாதித்து வருகிறது ஆகவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்ய வேண்டும் என பாமக சார்பில் சட்டப்பேரவையில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கை குறித்து அரசு எந்த பதிலும் இன்னும் அளிக்கவில்லை.
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…