தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்றும்,நோய்ப் பரவலுக்கு வழிவகுக்கும் மதுக்கடை பார்களையும் மூடுவதற்கு அரசு ஆனையிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி,ஏற்கனவே இதுகுறித்து முதல்வர் அவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில்,மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்,இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
இதனையடுத்து,தமிழ்நாட்டில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில்,மருத்துவத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்நிலையில்,தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்றும்,நோய்ப்பரவலுக்கு வழிவகுக்கும் மதுக்கடை பார்களையும் மூடுவதற்கு தமிழக அரசு ஆனையிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இது தொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க அத்தியாவசிய சேவைகளுக்குக் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.மதுக்கடைகள் அத்தியாவசியம் இல்லை.ஆனால்,கட்டுப்பாடுகள் இன்றி அவை செயல்படுகின்றன.அவை உடனடியாக மூடப்பட வேண்டும்.
மது குடிப்பகங்கள் தான் கொரோனா பரவல் மையங்களாக திகழ்கின்றன. ஆனாலும் அவை தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நோய்ப்பரவலுக்கு வழிவகுக்கும் மதுக்கடை குடிப்பகங்களையும் மூடுவதற்கு தமிழக அரசு ஆனையிட வேண்டும்”,என்று தெரிவித்துள்ளார்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…