பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடிதம்.!
திமுகவின் முயற்சிக்கு துணை நிற்கக்கோரி கேரளா, ஆந்திரா உட்பட 12 மாநில முதல்வர்களுக்கும் ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளார்.
புதிய மின்சாரத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். விவசாயத்திற்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தையும் கைவிட வேண்டும். மின்சாரத்தை தனியார்மயமாக்க மாநில அரசு நிறுவனங்களை மத்திய அரசு மயமாக்குவது ஏற்க முடியாததாகும் என்று ஸ்டாலின் கூறினார். திமுகவின் முயற்சிக்கு துணை நிற்கக்கோரி கேரளா, ஆந்திரா உட்பட 12 மாநில முதல்வர்களுக்கும் ஸ்டாலின் கடிதம் அளித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டு மின்சார திருத்த மசோதா திட்டத்தின் மூலம் மாநில அரசாங்கங்களின் அதிகாரத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் விவசாயிகளின் உரிமைகளை உணர்ந்து அதில் நல்ல திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்த நிலையில், பாஜக மற்றும் பாஜக அல்லாத மாநில முதல்வர்கள் சட்டத்திருத்தத்தை எதிர்க்க ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
மேலும், கலைஞர் அவர்கள் இந்தியாவிலேயே முதல் முறையாக அனைத்து விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்தார். அத்திட்டம் 1990-லிருந்து இன்றுவரை செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் தான் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கி, உணவுப் பற்றாக்குறையை போக்கியதுடன் லட்சக்கணக்கான விவசாயிகளைப் பாதுகாத்தது என்று கூறியுள்ளார். இத்தகைய திட்டத்தை முடக்கும்விதமாக, லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் விதமாகவும் மின்சார திருத்தச் சட்டம் 2020 உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
The Electricity Amendment Bill 2020 is designed to undermine the authority of State governments and undo decades of progress made towards realising farmers rights in India.@PMOIndia I urge you to revoke this proposed bill & uphold our constitutional principles of federalism. pic.twitter.com/uRmtvVVdf1
— M.K.Stalin (@mkstalin) May 28, 2020