இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறிய நிலையில் ,சட்டவிரோதி ஆகிவரும் அமைச்சரை ஆளுநர் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறிய நிலையில், அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக ஆளுநரிடம் திமுக புகார் மனு அளித்துள்ளது.
இஸ்லாமிய தீவிரவாதத்தை உருவாக்கும் நோக்கத்தில் சில இயக்கங்கள் தொடர்ந்து அரசியல் செய்தால் இந்து பயங்கரவாதம் உருவாகுவதை யாராலும் தடுக்க முடியாது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனியார் தொலைக்காட்சியின் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், பாஜகவுக்கு அதிமுக பாதம் தாங்குவது குறித்து நமக்கு ஆட்சேபணை இல்லை. அதற்காக நெஞ்சில் நஞ்சும், வாயில் வன்மமும் கொண்டு நாட்டை வன்முறைப் பாதைக்கு மாற்ற ராஜேந்திரபாலாஜி என்ற ஒரு அமைச்சர் திட்டமிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது.அரசியலமைப்பு சட்டப்படி பதவிப் பிரமாணம் எடுத்தவர் கண்ணுக்கு முன்னால் மதச்சார்ப்பின்மைக்கு எதிராக பேசுகிறார். மக்களை மதரீதியாக துண்டாட துணிகிறார். ராஜேந்திர பாலாஜியை ஆளுநர் பதவிநீக்கம் செய்வதோடு, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இதற்கு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பதிவில்,ஆளுநர் மாளிகை ஒன்றும் அண்ணா அறிவாலயம் கிடையாது மு.க.ஸ்டாலின் சொல்லுவதை கேட்க… அவரின் கோரிக்கையை ஏற்க என்று பதிவிட்டார்.
இந்நிலையில் இன்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை பதவி நீக்கம் செய்யக்கோரி ஆளுநரிடம் திமுக புகார் அளித்துள்ளது.சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநரின் செயலரிடம் திமுக எம்எல்ஏக்கள் ஜெ.அன்பழகன், மா. சுப்பிரமணியன் ஆகியோர் மதசார்பின்மைக்கு எதிராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாக புகார் மனு அளித்துள்ளனர்.
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத் பாலாஜி…
சென்னை: சென்னையில் 2025-ஐ வரவேற்க தயாரான மெரினா கடற்கரை முழுவதும் பொதுமக்கள் குவிந்துள்ளனர். மெரினா கடற்கரை மணிக்கூண்டு பூக்கள், வண்ண…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சென்னையில் போராட்டம் நடத்த முயன்ற நாம் தமிழர் தலைமை…
மணிப்பூர்: மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் வன்முறை நடந்து வருகிறது. இதில் இதுவரை 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு ஆயிரக்கணக்கானோர்…
சென்னை: ஸ்டாண்ட் அப் காமெடி (STANDUP COMEDY) என்கிற பெயரில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அவதூறாக பேசிய பரத்…
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் இன்று இரவு கடற்கரை சாலையில் நடைபெற உள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏராளமான சுற்றுலாப் பயணிகள்…