ஜெயலலிதா_வுக்கு பிரதமர் மோடி புகழாரம்…!!
- மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71_ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகின்றது.
- பிரதமர் மோடி தனது ட்வீட்டர் பக்கத்தில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை நினைவு கூர்ந்துள்ளார்.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 71_ஆவது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்களால் அனுசரிக்கப்படுகின்றது.மேலும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவில் அதிமுக தலைமைக்கழகம் சார்பில் வெற்றிபெற சூளுரை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்வீட்_டர் பக்கத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஆற்றிய அரசியல் பங்கினை பல தலைமுறைகள் நினைவு கொள்ளும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் அவர் சிறந்த நிர்வாகியாகவும், கருணை உள்ளம் கொண்ட தலைவராகவும் திகழ்ந்தவர் ஜெயலலிதா என்றும் , அவர் செயல்படுத்திய நலத்திட்டங்களால் எண்ணற்ற ஏழை, எளிய மக்கள் பயனடைந்திருப்பதாக பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
Tributes to Jayalalithaa Ji on her birth anniversary. Her contribution towards the development of Tamil Nadu will be remembered for generations. A fine administrator and compassionate leader, her welfare measures benefitted countless poor people.
— Narendra Modi (@narendramodi) February 24, 2019