ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல்..! தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி வரும் 28ஆம் தேதி தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார். அதன்படி குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது ரூ.550 கோடி மதிப்பீட்டில் ராமேஸ்வரம் பாம்பன் கடலின் நடுவே கட்டப்பட்ட புதிய ரயில்வே தூக்கு மேம்பாலத்தை திறந்து வைக்கவுள்ளார்.
இந்தியாவில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ சார்பில் அனைத்து விண்வெளி திட்டங்களும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவு தளத்தில் இருந்தே செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக மற்றொரு ராக்கெட் ஏவு தளத்தை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. பல்வேறு கட்ட ஆய்வுகளின் முடிவில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரபட்டினம் தேர்வு செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது.
நடிகையும் பாஜக மாநில துணைத் தலைவியுமான ஜெயலட்சுமி கைது!
இதையடுத்து அங்கு புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிகளை வருகிற 28-ந் தேதி பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். மேலும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மேற்க்கொண்டுள்ள ‛ என் மண் என் மக்கள் யாத்திரை’ நிறைவு விழாவில் பங்கேற்க திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கும் பிரதமர் மோடி வருகை தர உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.