மத்திய அரசு திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது: சென்னை பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு

Narendra Modi: சென்னை மக்களை கண்டுகொள்ளாத அரசாக திமுக அரசு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை நந்தனத்தில் ‘தாமரை மாநாடு’ என்ற பெயரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். வணக்கம் சென்னை என கூறி தனது உரையை தொடங்கி மோடி, “சில காலம் முன்பு தான் சென்னையில் புயல் தாக்கி பெருவெள்ளம் ஏற்பட்டது, இதன்போது திமுக அரசு சரிவர செயல்படவில்லை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டவில்லை.

Read More – இந்திய மக்களுக்காக ஒரு யோகி போல பிரதமர் மோடி வாழ்ந்து வருகிறார்..  அண்ணாமலை பேச்சு.!

நான் நாட்டு மக்களை நினைத்துதான் அரசியல் செய்கிறேன், குடும்ப அரசியல் செய்யும் கட்சிகள் தங்கள் குடும்பத்தை மட்டுமே நினைத்து அரசியல் செய்கின்றன. இந்தியாவின் வளர்ச்சியில் சென்னை மக்கள் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன. திறமை, வணிகம், பாரம்பரியம் ஆகியவற்றின் மையமாக திகழ்கிறது சென்னை. மத்திய அரசு மேற்கொள்ளும் திட்டங்களுக்கு திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டி வருகிறது, நான் தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் சிலருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது.

Read More – சென்னையில் பாஜக பொதுக்கூட்டம்..! பிரதமர் மோடியுடன் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

தமிழகத்தில் பாஜகவிற்கு மக்கள் ஆதரவு வலுவடைவதால் சிலருக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது, இங்கு பாஜக வாக்கு வங்கி அதிகரித்துள்ளது, இதை சென்னையில் நான் கண்கூடாக பார்க்கிறேன். பல லட்சம் கோடியை சுருட்டுவது கடினமாக உள்ளது என்பதே திமுகவின் மனக்குறை, தமிழக வளர்ச்சி திட்டங்களின் தொகையை கொள்ளையடிக்க முடியாமல் இருப்பதே திமுகவினருக்கு சிக்கல், திமுகவினர் கொள்ளையடித்த பணம் வசூலிக்கப்பட்டு மீண்டும் மக்களுக்கு செலவிடப்படும், தமிழகத்தில் போதைப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கிறது, ஆளும் கட்சி ஆதரவோடு போதைப் பொருட்கள் கடத்தப்படுகின்றன, போதைப் பொருள் கலாச்சாரத்தை ஒழிப்போம்” என பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்