பிரதமர் மோடியின் தமிழக பயணம்… திருச்சி, மதுரை, ராமேஸ்வரம்.!
உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ஆம் தேதி, நாளை மறுநாள் திங்கள் கிழமை நடைபெற உள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க உள்ளார். கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள உள்ளதால் 11 நாட்கள் விரதத்தையும் பிரதமர் மோடி கடைபிடித்து சிறப்பு பூஜைகளையும் செய்து வருகிறார்.
இந்தியாவில் உள்ள பல்வேறு கோவில்களுக்கு பிரதமர் மோடி பயணித்து வருகிறார். ஏற்கனவே கேரளாவில் குருவாயூர் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி, அடுத்ததாக தமிழகத்தில் உள்ள திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் உள்ளிட்ட கோவில்களுக்கு செல்ல உள்ளார.
தமிழ்நாட்டை இந்தியாவின் விளையாட்டு தலைநகரமாக நிலை நிறுத்துவதே குறிக்கோள் : முதல்வர் சூளுரை.!
நேற்று மாலை சென்னையில் தொடங்கிய கேலோ இந்தியா 20204 விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக சென்னை வந்திருந்த பிரதமர் மோடி. அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். பின்னர் இரவு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அவருக்கு ஆளுநர் ரவி வரவேற்பு அளித்தார்.
ஸ்ரீரங்கம் :
இரவு ஆளுநர் மாளிகையில் தங்கிய பிரதமர் மோடி, இன்று காலை சென்னை விமான நிலையத்திலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு புறப்பட உள்ளார். பின்னர் அங்கிருந்து ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு பிரதமர் மோடி சாலை மார்க்கமாக செல்கிறார். ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார்.
மதுரை :
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தமிழறிஞர்கள் நடத்தும் கம்பராமாயண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பின்னர் காரில் பயணித்து பஞ்சகரை செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று, திருச்சி விமான நிலையத்திலிருந்து மதுரை செல்கிறார்.
மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் கோவிலுக்கு இன்று பிரதமர் மோடி செல்ல உள்ளார். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி இன்று மற்றும் நாளை இரண்டு நாட்களுக்கும் மதுரை மாவட்டம் முழுவதும் ஆளில்லா விமானங்கள், டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிட்டுள்ளார்.
ராமேஸ்வரம் :
ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி அங்குள்ள ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து 22 புண்ணிய நீர் தலத்திலும் நீராட உள்ளார். அதன் பிறகு, அங்கிருந்து அயோத்தி ராமர் கோயிலுக்கு தீர்த்தம் எடுத்து செல்கிறார். நாளை தனுஷ்கோடி செல்லும் பிரதமர் மோடி ராமர் பாதத்தை தரிசிக்க உள்ளார். அதன் பின்னர் டெல்லிக்கு திரும்புகிறார் பிரதமர் மோடி.