பிரதமர் மோடி வருகை… காங்கிரஸ் கறுப்புக்கொடி போராட்டம்.!

PM Modi Tamilnadu visit - Congress Protest

பிரதமர் மோடி இன்றும் நாளையும் தமிழகத்தில் பல்வேறு அரசியல் நிகழ்வுகள், நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளார். இன்று பிற்பகல் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் என் மண் என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்க உள்ளார். அதன் பிறகு, மதுரை, தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை துவக்கி வைக்கிறார் .

இந்நிலையில், பிரதமர் மோடியின் 2 நாள் பயணத்தின் போது அவருக்கு கருப்பு கொடி காட்டும் போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து இருந்தார் .

Read More – பிரதமர் மோடியின் 2 நாள் தமிழக பயணம்… திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை முழு விவரம்…

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து சிறைபிடிக்கப்படுவதும், படகுகள் சேதப்படுத்தப்படுவதும், மீனவர்கள் தாக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது என்ற குற்றசாட்டை முன்வைத்தும், இரண்டு நாட்கள் முன்னர் தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றத்தில் 6 மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதற்கு உரிய நடவடிக்கையை மத்திய அரசு முன்னெடுக்கவில்லை என கூறி பிரதமர் வருகையின் போது கருப்பு கொடி போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

Read More – 554 ரயில் நிலையங்கள்… 1,500 ரயில்வே மேம்பாலங்கள் திட்டப்பணிகள்.! பிரதமர் மோடி துவக்கம்.!

இன்று ராமேஸ்வரம் கடற்கரையில் கடலில் இறங்கி கருப்பு கொடி காட்டும் போராட்டத்தை காங்கிரஸ் கட்சியினர் நடத்த உள்ளனர் என்றும் தமிழகம் முழுவதும் இலங்கை கடற்படையினர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி வருகையின் போது கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்