நேற்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு ஒரு வீடியோ செய்தி வெளியிட்டார்.அதில் ,ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் வீட்டின் விளக்கை அனைத்துவிட்டு, டார்ச், அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என தெரிவித்தார்.
வீட்டிலிருந்து அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் .வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என்று வீடியோ மூலம் நாட்டு மக்களுக்கு கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் தமிழக மின்சார வாரியம் ஒரே நேரத்தில் மாநிலம் முழுவதும் மின்சாரம் பயன்பாட்டில் இருந்து நிறுத்தப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்பதால் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது.அதாவது,நாளை இரவு அனைத்து செயற்பொறியாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என்றும் சரியாக 9 மணிக்கு மின்சாரம் சரியான அளவில் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.தமிழகத்தில் நாளை இரவு 9.00 மணி முதல் 9.09 மணி வரை வீட்டின் மின் விளக்குகளை மட்டும் அணைக்க வேண்டும் என்றும் இதர மின்சாதனங்களை அணைக்க வேண்டாம் என்றும் மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது. அனைத்து மின்சாதனங்களையும் ஒரே நேரத்தில் அணைத்துவிட்டு ஒரே நேரத்தில் ஆன் செய்தால் மின்சாரப் பிரச்சனை ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது..தமிழகம் முழுவதும் விளக்குகள் அணைக்கும்பொழுது தோராயமாக 1000 மெகாவாட் அளவிற்கு மின்சாரம் குறைய வாய்ப்பு உள்ளது என்று மின்சாரவாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது. தவெக தலைவர் விஜய் தலைமையில்…
சென்னை : 'சீயான்' விக்ரம் நடிப்பில் S.U.அருண் குமார் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வீர தீர சூரன். இப்படம்…
சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று (மார்ச் 28) சென்னை, திருவான்மியூரில்…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-ல் நேற்றைய போட்டியில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இந்த…
கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…
சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த 4 அணிகள் பிளேஆஃப்…