நெருங்கும் தேர்தல்.! மீண்டும் மீண்டும் தமிழகத்தில் பிரதமர் மோடி…

PM Modi visit Tamilnadu

PM Modi – இன்னும் ஒரு மாத காலத்தில் இந்தியாவில் மக்களவை தேர்தல் தொடங்க உள்ளது. இன்னும் சில நாட்களில் இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான தேதிகளை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது. அதன் பின்னர் தேர்தல் நடத்தை விதிகள் அமலாகிவிடும். தேர்தல் விதிகள் அமலில் இருக்கும் சமயத்தில் புதிய திட்டங்களை அரசாங்கம் அறிவிக்கவோ, செயல்படுத்தவோ கூடாது.

இதன் காரணமாகவோ என்னவோ , பிரதமர் மோடி இந்திய முழுக்க சூறாவளி பயணம் மேற்கொண்டு  பல்வேறு மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டங்கள் தொடங்கியும், முடிவுற்ற திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்கும் அர்ப்பணித்தும் வருகிறார்.

Read More –நாடு முழுவதும் மார்ச் 10ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம்! விவசாய சங்கங்கள் அறிவிப்பு

ஏற்கனவே, தமிழகத்திற்கு மூன்று முறை பயணம் செய்துள்ள பிரதமர் மோடி இன்று 4வது முறையாக தமிழகம்  வரவுள்ளார். கடந்த ஜனவரி மாதத்தில் ராமேஸ்வரம் கோயில், அதன் பிறகு திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் சாமி தரிசனம், அடுத்து கடந்த மாதம் பிப்ரவரி 27, 28 ஆகிய தேதிகளில் திருப்பூர் ,  மதுரை , தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் பொது நிகழ்வு மற்றும் கட்சி பொதுக்கூட்டம் ஆகியவற்றில் பங்கேற்று இருந்தார் .

இதனை அடுத்து இன்று இந்த வருடத்தில் 4வது முறையாக, தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி, இன்று பிற்பகல் 3.30 மணியளவில் கல்பாக்கம் அணு உலை ரியாக்டர் மேம்பாடு திட்டத்தை பார்வையிடுகிறார். அதன் பிறகு இன்று மாலை 5 மணிக்கு சென்னை வரும் மோடி, நந்தனம் ஓய்எம்சிஏ மைதானத்தில் பாஜக ஏற்பாடு செய்துள்ள தாமரை மாநாடு பொதுகூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதனால் பல்வேறு போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுளள்னர்.

Read More – பாஜக தேர்தல் நிதி! ரூ.2000 நன்கொடை வழங்கிய பிரதமர் மோடி

அதற்கு முன்னர் , இன்று காலை 10.30 மணியளவில், தெலுங்கானாவின் அடிலாபாத்தில் 56,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.  இன்றைய தமிழக பயணத்தை முடித்துவிட்டு நாளை மீண்டும் தெலுங்கானா மாநிலம் சென்று, அங்கு, சங்கரெட்டியில் 6,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

நாளை ஒடிசாவில் 19,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.   மார்ச் 6ஆம் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ரூ.15,400 கோடி மதிப்பிலான பல திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்