பிரதமரின் 3 நாள் தமிழக பயணம்.! குமரி தியான மண்டபம் முதல்… திருவனந்தபுரம் வரை…

PM Modi TN Visit

கன்னியாகுமரி: இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிந்து மே 30, 31, ஜூன் 1ஆகிய தேதிகளில் பிரதமர் மோடி 3 நாள் பயணமாக  கன்னியாகுமரி வரவுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி 7ஆம் கட்ட வாக்குப்பதிவுடன் நிறைவடைய உள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் (மே 29) நிறைவடைய உள்ளது. பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி தேர்தல் பிரச்சரமும் இதில் அடங்கும். இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் பிரதமர் மோடி 3 நாள் பயணமாக தமிழகம் வரவுள்ளார்.

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பிரதமர் அலுவலகத்தில் இருந்து கேரள தலைமைச் செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையம் வரும் பிரதமர் மோடி மீண்டும் ஜூன் 1ஆம் தேதி திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்பட உள்ளார் என்பதால், கேரள தலைமைச் செயலருக்கு இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

மே 30ஆம் தேதி வியாழன் அன்று பிற்பகல் 3.55 மணிக்கு டெல்லியில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வரும் பிரதமர் மோடி, அங்கிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு மாலை 4.35 மணிக்கு கன்னியாகுமரி செல்கிறார். மே 31 ஆம் தேதி கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே இருக்கும் விவாகனந்தர் நினைவு மண்டபத்தில் விவேகானந்தர் சிலை இருக்கும் இடத்திலோ அல்லது அங்குள்ள தியான மண்டபத்திலோ பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ள உள்ளார்.

அதற்கு பிறகு ஜூன் 1ஆம் தேதி பிற்பகல் 3.25 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்ல உள்ளார். பின்னர் 4 மணியளவில் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு விமானம் புறப்பட  உள்ளார் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்