தமிழகத்தில் வந்தே பாரத் ரயில்.. புதிய விமானநிலைய முனையம்.! இன்று துவங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.!
தமிழகத்தில் வந்தே பாரத் ரயில் சேவை, சென்னை புதிய விமானநிலைய முனையம் என பல்வேறு திட்டங்களை இன்று பிரதமர் நரேந்த்ரே மோடி துவங்கி வைக்கிறார்.
சென்னை விமான நிலையத்தில் புதிய முனையம், சென்னை – கோயமுத்தூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவை, சுமார் 3,700 கோடி மதிப்புள்ள பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா போன்றவற்றை துவங்கி வைப்பதற்காக இன்று பிரதமர் மோடி தமிழகம் வர உள்ளார்.
ஐந்தடுக்கு பாதுகாப்பு :
பிரதமர் வருகையை ஒட்டி பல்வேறு இடங்களில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக அவர் செல்லும் இடங்களுக்கு ஐந்தடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளுக்காக மட்டுமே சுமார் 20 ஆயிரம் கோடி சார் தெரிவிக்கப்பட்டுள்ளனர்.
வந்தே பாரத் ரயில் சேவை :
இன்று பகல் ஒரு மணிக்கு ஹைதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வர உள்ளார். அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ரவி ஆகியோர் வரவேற்க உள்ளனர். மாலை 4 மணிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை துவங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.