நாளை மறுநாள் திண்டுக்கல் காந்திகிராம பல்கலைக்கழக பட்டளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகத்தின் வருகை தருகிறார்.
திண்டுக்கல்லில் உள்ள காந்திகிராம பல்கலைக்கழகத்தின் 36 வது பட்டமளிப்பு விழா மற்றும் காந்திகிராம நிறுவனத்தின் பவள விழாவை ஒட்டி நடைபெறும் விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.விழாவில் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரை ஆற்ற உள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி,தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்க உள்ளனர்.
இதையடுத்து பிரதமரின் விமானம் தரையிறங்கும்,மதுரை விமான நிலையத்தில் ஐந்தடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. போலீசார் விமான நிலைய வளாகத்தில் தீவிர கண்காணிப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.திண்டுக்கல் நகர் முழுவதும் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
மதுரையிலிருந்து ஹெலிகாப்டர் வாயிலாக பிரதமர் பயணம் செய்யும் இருக்கும் நிலையில் ,திண்டுக்கல் சின்னாளப்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேட் தளத்தில்,ஹெலிகாப்டரை தரை இறங்கி இன்று பரிசோதனை செய்யப்பட்டது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…