கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி தொடக்க விழா சென்னையில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். இதற்காக சென்னைக்கு வந்த அவருக்கு சாலையில் வழிநெடுக திரண்டு இருந்த பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அவர்களின் வரவேற்பை ஏற்கும் விதமாக கைகளை அசைத்தபடி பிரதமர் சென்றார். இதையடுத்து நேரு உள் விளையாட்டு அரங்கத்திற்கு வந்த பிரதமர் மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைத்து விட்டு பிரதமர் மோடி ஆளுநர் மாளிகைக்கு புறப்பட்டார். சாலை மார்க்கமாக கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை சென்ற பிரதமர் இன்றிரவு அங்கு தங்குகிறார். இதையடுத்து கவர்னர் மாளிகையை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…
மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில்…