நேற்று சென்னைக்கு வருகை தந்த அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கார் மூலம் நேரு விளையாட்டு அரங்கத்துக்கு வந்த மோடி கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் பயணமாக ராமேஸ்வரம் மற்றும் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு பிரதமர் வருகை தந்தார். அதன்படி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலின் தெற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே நுழைந்த பிரதமருக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்ட நிலையில் கோவிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் அவர் சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து இரண்டாம் நாள் பயணத்தை தொடர்ந்த மோடி, ராமேஸ்வரம் அருள்மிகு இராமநாதசுவாமி கோவிலுக்கு வருகை தந்து கோவிலின் புனித தீர்த்தங்களில் நீராடி சுவாமி தரிசனம் செய்ததுடன் பக்தி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இதையடுத்து இன்றிரவு ஸ்ரீராமகிருஷ்ணர் மடத்துக்கு செல்லும் பிரதமர், அங்கு தங்கும் நிலையில் நாளை காலை ராமநாத சுவாமி கோவிலில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்கிறார்.
பின்னர், காலை 10.05 மணிக்கு சாலை மார்க்கமாக தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கு செல்லும் பிரதமர் அங்குள்ள கோதண்டராமர் கோவிலில் 10:25 முதல் 11 மணி வரை நடைபெறும் வழிபாடுகளில் பங்கேற்கிறார். இதை தொடர்ந்து 11.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் சென்று, அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்லவுள்ளார்.
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…
சென்னை : ஐபிஎல் திருவிழா ஆரம்பித்துவிட்டது. அதில் வழக்கம் போல புதிய இளம் வீரர்கள் நட்சத்திரங்களாக ஜொலிக்க ஆரம்பித்துள்ளனர். அவர்களுடன்…