PM Modi : இரண்டு நாட்கள் பயணமாக நேற்று தமிழகம் வருகை தந்த பிரதமர் நரேந்திர மோடி, இன்று தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் ரூ.17,300 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதுபோன்று பல்வேறு முடிவுற்ற திட்டங்களையும் காணொலி மூலம் திறந்து வைத்தார் பிரதமர், தூத்துக்குடியில் உள்ள குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டி வைத்தார்.
அதேசமயத்தில், தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் தேசிய நெடுஞ்சாலைகள் திட்டம் உள்ளிட்ட முடிக்கப்பட்ட 36 திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேலும், இந்தியாவின் முதல் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்ட, பயணிகள் கப்பலை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, அந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வணக்கம் என கூறி உரையாற்றினார். அப்போது பேசியதாவது, தூத்துக்குடியில் தொடங்கி வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் இந்தியாவின் பல இடங்களில் வளர்ச்சிக்கு உந்துதலாக இருக்கும். நாட்டின் வளர்ச்சிக்கு இது மிக முக்கியமானது.
அதன்படி, வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது. இந்த திட்டங்களால் தமிழ்நாட்டில் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். நாடு வளர்ச்சியடைந்த பாரதம் என்ற நோக்கத்தை நோக்கி பயணித்து வருகிறது. வளர்ச்சியடைந்த பாரதத்தில் தமிழ்நாட்டின் பங்கு மகத்துவமானதாக இருக்கும்.
தூத்துக்குடியை கப்பல் போக்குவரத்து மையமாக மாற்ற, அளித்த உறுதிமொழி நிறைவேற்றப்பட்டுள்ளது. தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகள், கனவுகளை இன்று நனவாக்கியுள்ளோம். இந்திய வரைபடத்தின் வளர்ச்சியில் முன்னேற்றத்தின் எடுத்துக்காட்டு இன்றைய நிகழ்வாகும். ஹைட்ரஜன் படகு காசியின் கங்கையில் பயணிக்கும்போது தமிழ்நாடு உடனான நல்ல உறவு பலப்படும்.
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் உள்ளிட்டவையால் பசுமையாக்கலில் தூத்துக்குடி மையமாக மாறும். ரயில் மற்றும் சாலை பணிகளை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். புதிய சாலை மற்றும் ரயில் பணிகளால் சுற்றுலாத்துறை மேம்படும். 75 கலங்கரை விளக்கங்களை மேம்படுத்தப்பட்ட சுற்றுலா தளங்களாக மாற்றும் பெருமை எனக்கு கிடைத்துள்ளது.
தற்போது நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் காங்கிரஸ் ஆட்சியில் கோரிக்கையாகவே இருந்தனர். காங்கிரஸ் ஆட்சி மீது நேரடியாக குற்றசாட்டுகளை முன்வைக்கிறேன், அவை கசப்பான உண்மைகள். ஆனால், தமிழ்நாட்டில் பாஜக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
தடைகளை எல்லாம் தாண்டி தமிழ்நாட்டின் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்திய தீருவோம். மக்களின் சேவகனான நான் உங்களின் விருப்பங்கள், கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறேன். பாஜக அரசின் சாதனைகளை அச்சியிடாமல் நாளிதழ்களை மாநில அரசு தடுக்கிறது எனவும் தெரிவித்தார்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…