பழசை மறந்திருந்தோம்.. பிரதமர் நினைவூட்டினார்.. தமிழிசை போட்ட லிஸ்ட்.!

Tamilisai Soundararajan

சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. – தமிழிசை பேட்டி.

புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி பாஜக வேட்பாளருமான தமிழிசை சௌந்தராஜன் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மக்கள் மறந்து இருந்த பழைய நினைவுகளை புது திட்டங்கள் மூலம் அதனை செய்லபடுத்தி உள்ளார் பிரதமர் மோடி என பேசினார்.

அவர் கூறுகையில், நாம் அனைவரும் , ரயிலை விட விமானத்தில் சென்றால் தான் வேகமாக ஒரு இடத்திற்கு செல்ல முடியும் என நினைத்து இருந்தோம். அதனை தவிர்த்து ரயிலிலும் வேகமாக செல்ல முடியும் என வந்தே பாரத் ரயிலை கொண்டு வந்தார் பிரதமர் மோடி.

அடுத்து மக்கள் மறந்து இருந்த ரேடியோவை நினைவூட்ட மனதின் குரல் எனும் நிகழ்ச்சி கொண்டு வந்து அதன் மூலம் மக்களிடம் உரையாற்றினார் பிரதமர் மோடி. மக்கள் மறந்து இருந்த தபால் நிலையத்திற்கு செல்வ மகள் சேமிப்பு திட்டம் கொண்டு வந்து, அதன் மூலம் மீண்டும் மக்களை தபால் நிலையம் கொண்டு வந்தார் பிரதமர் மோடி என கூறி, இப்படி பிரதமர் கொண்டு வந்த பல்வேறு திட்டங்கள் இருக்கிறது என்றும் இதனை விடுத்து எதிர்க்கட்சிகள், பிரதமர் பிரிவினைவாதம் பேசுவதாக பொய் குற்றம் சாட்டை முன்வைத்து வருகின்றனர் என தமிழிசை சௌந்தரராஜன் பேசினார்.

அவர் மேலும் பேசுகையில், மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன் முதல் 100 நாளில் 25 நாட்கள் இளைஞர்களுக்ககால நான் முழுக்க உழைப்பேன் என பிரதமர் மோடி கூறுகிறார். 4 கட்ட தேர்தலில் ஏற்கனவே எங்களுக்கு (பாஜக) பெரும்பான்மை வந்துவிட்டது . இனி எல்லாம் போனஸ் தான் என்றும் செய்தியாளர் சந்திப்பில் தமிழிசை சௌந்தரராஜன் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்