வேட்டி, சட்டையில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்த பிரதமர் மோடி..!
சீன அதிபர் ஷி ஜின்பிங்கை வரவேற்க தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் கோவளத்தில் இருந்து மாமல்லபுரம் வந்தார் பிரதமர் மோடி. பின்னர் சீன அதிபர் ஷி ஜின்பிங்கை மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி சந்தித்தார்.
இதற்காக பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11 மணிக்கு சென்னை வந்தார். பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் முதலமைச்சர் , துணை முதலமைச்சர் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவளத்திற்கு சென்றார். இந்நிலையில் சீன அதிபரை சந்திக்க தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டையில் பிரதமர் மோடி மாமல்லபுரம் வந்தடைந்தார். மேலும் தோளில் துண்டுடன் பிரதமர் மோடி காணப்பட்டார்.