முதுமலை புலிகள் காப்பகத்துக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி.!
இன்று முதுமலையில் பொம்மன், பெள்ளி தம்பதியை சந்திக்கிறார் பிரதமர் மோடி.
நீலகிரி மாவட்டம் முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமை இன்று பார்வையிடுகிறார் பிரதமர் மோடி. இந்நிலையில், இன்று காலை மைசூரில் இருந்து பந்திபூர் செல்லும் பிரதமர் புலிகள் காப்பகத்தை சுற்றி பார்க்க உள்ளார்.
பின்னர், காலை 9.35 மணிக்கு பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு சாலை மார்க்கமாக செல்லவுள்ளார். மேலும், அங்கு ஆஸ்கார் விருது பெற்ற ‘The Elephant whisperers’ ஆவணப்படத்தில் நடித்த பொம்மன்-பெள்ளியை சந்தித்து பாராட்டு தெரிவிக்கவுள்ளார்.