பிரதமர் மோடி இரண்டு பணக்காரனுக்கு ப்ரோக்கர் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார் – டி.கே.எஸ். இளங்கோவன்
பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள 2 பணக்காரர்களுக்கு புரோக்கர் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார் என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் குற்றசாட்டு.
திரிபுரா மாநிலத்தில் பா.ஜ.க.வின் அராஜகத்தை கண்டித்து நேற்று மாலை சென்னை வண்ணாரப் பேட்டை தங்கசாலை மணிக்கூண்டு அருகே சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. சார்பில் டி.கே.எஸ்.இளங்கோவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைவனுக்கு நல்ல நோக்கம் இருக்கும். ஆனால் ஒரு புரோக்கருக்கு எப்படி நல்ல நோக்கம் இருக்க முடியும். பிரதமர் மோடி குஜராத்தில் உள்ள 2 பணக்காரர்களுக்கு புரோக்கர் வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். அவருக்கு இந்த நாட்டை விற்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். பாதி அரசாங்க சொத்தை விற்று விட்டார் என குற்றம்சாட்டியுள்ளார்.