வேட்டி சட்டையில் என்ட்ரி.! பாம்பனில் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

பாம்பனில் ரூ.550 கோடி மதிப்பில் கடலின் நடுவே கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.

pambanbridge -PMModi

ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில் சென்ற போது, சாலையோரம் திரண்டுள்ள பொதுமக்களை பார்த்து கையசைத்தார். தமிழகம் வந்தைடைந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மேலும், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நவாஸ்கனி எம்.பி., ராமநாதபுரம் ஆட்சியர் ஆகியோரும் வரவேற்றனர். பாரம்பரிய உடையான பட்டு வேட்டி, சட்டையுடன் என்ட்ரி கொடுத்த பிரதமர் மோடி, பாம்பனில் புதிய ரயில் பாலத்தை திருந்து வைத்தார். இப்பொது, பாம்பனில் கடலுக்கு நடுவே ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ள ரயில் பாலம் பயன்பாட்டிற்கு வந்தது.

இதையடுத்து பாம்பனில் இருந்து ராமேஸ்வரத்துக்கு ரயில்வே பணியாளர்கள், பள்ளி மாணவர்களுடன் ரயில் செல்கிறது. தூக்குப்பாலம் மேல்நோக்கி உயர்ந்து செல்ல கடலோர காவல் படை ரோந்து கப்பல்கள் பாலத்தை கடக்கும்.

தற்போது, ராமேஸ்வரத்தில் இருந்து ஹெலிகாப்டரில் பிரதமர் மோடி மதுரை விமான நிலையம் செல்கிறார். பிரதமர் மோடி வருகையையொட்டி மதுரை விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் பாஜக நிர்வாகிகள் மற்றும் முக்கிய நபர்களை மோடி சந்திக்கிறார்.

இதனிடையே, பிரதமர் மோடி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், சிறையில் இருந்த 14 தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் விவகாரத்தை மனிதாபிமானத்துடன் அணுக வேண்டும் என இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். இந்தச் சூழலில் நல்லெண்ணத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்களை இலங்கை அரசு விடுவித்துள்ளது. மீனவர்கள் 14 பேரும் விரைவில் தாயகம் திரும்பவுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்