45 மணிநேர தியானத்தை முடித்துக்கொண்டார் பிரதமர் மோடி.!
கன்னியாகுமரி: நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், நேற்று முன்தினம் (மே 30) 3 நாள் பயணமாக கன்னியாகுமரி வந்திருந்த பிரதமர் மோடி அன்றைய தினம் பகவதி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.
பின்னர், அன்று மாலை கடலுக்கு நடுவே இருக்கும் விவேகானந்தர் மண்டபத்திற்கு சிறப்பு படகு மூலம் சென்ற பிரதமர் மோடி, விவேகானந்தர் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு தனது 45 மணிநேர தியானத்தை தொடங்கினார்.
பிரதமர் மோடி தியானம் செய்யும் புகைப்படங்கள், வீடியோக்கள், பிரதமர் சூர்யநமஸ்காரம் செய்யும் வீடியோக்கள் ஆகியவை அவ்வப்போது சமூக வலைதள பக்கங்களில் வெளியாகின. இன்று பிற்பகல் 3 மணிக்கு பிரதமர் மோடி தனது தியானத்தை முடிப்பார் என கூறப்பட்ட நிலையில் அதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாகவே தனது 45 மணிநேர தியானத்தை முடித்துக்கொண்டார் பிரதமர் மோடி.
பின்னர், விவேகானந்தர் மண்டபத்தில் இருந்து படகு மூலம் கரைக்கு வந்த பிரதமர் மோடி, அருகில் உள்ள திருவள்ளூர் சிலைக்கு மரியாதை செலுத்தி வருகிறார். இந்த நிகழ்வுக்கு பிறகு அங்கிருந்து கார் மூலம் அரசு விருந்தினர் மாளிகைக்கு புறப்பட உள்ளார் என்றும். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் வருவார் என்றும் , அங்கிருந்து சிறப்பு விமானம் மூலம் டெல்லி புறப்பட உள்ளார் பிரதமர் மோடி என்று கூறப்பட்டுள்ளது.