மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி..! மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்

PM Modi TN Visit

டிவிஎஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள டிஜிட்டல் மொபிலிட்டி தளத்தை மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்து நேற்று உரையாற்றினார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக நேற்று தமிழகம் வந்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மேற்கொண்ட ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையின் நிறைவு விழா பல்லடத்தில் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் கலந்துக் கொண்டு அவர் பேசினார்.

Read More – தொண்டர்கள் கூட்டத்தைப் பார்க்கும் காவிக்கடலை பார்ப்பது போல் உள்ளது- பிரதமர் மோடி ..!

பல்லடம் பொதுக்கூட்ட நிகழ்ச்சியை முடித்துவிட்டு பிரதமர் மோடி மாலை மதுரை சென்றடைந்தார். பின்னர் மதுரை வீரபாஞ்சான் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற MSME டிஜிட்டல் வர்த்தக கருத்தரங்க கூட்டத்தில் கலந்துகொண்டார். அங்கு பிரதமரை வரவேற்க தமிழக அரசு சார்பில் தகவல் தொழில் நூட்ப துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பிரதமருக்கு வரவேற்பு அளித்தார். கூட்டத்தில் தேசிய அளவிலான டிஜிட்டல் வர்த்தக கருந்தங்கள் சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர், கருத்தரங்கில் மாணவ, மாணவிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

Read More – பிரதமர் மோடி வருகை… மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் பக்தர்களுக்கு தடை.!

பின்னர் மோடி பேசுகையில், “பொருளாதார விவகாரத்தில் மிகப்பெரிய பங்கை ஆட்டோமொபைல் துறை வகித்து வருகிறது, நாட்டின் வளர்ச்சிக்கு சிறு குறு நடுத்தர தொழில்கள் முக்கிய பங்காற்றுகிறது, அவை வாகனத் தொழிலை முன்னோக்கி நகர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இன்றியமையாதவை” என்றார்.

Read More – பிரதமர் மோடியின் 2 நாள் தமிழக பயணம்… திருப்பூர், தூத்துக்குடி, நெல்லை முழு விவரம்…

நிகழ்ச்சியை தொடர்ந்து பிரதமர் மோடி உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தினார். தொடர்ந்து அங்குள்ள தனியார் விடுதியில் தங்கவுள்ள மோடி இன்று காலை ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்குச் சென்று அங்கு புதிய நலத்திட்டப்பணிகளை தொடங்கி வைக்க உள்ளார். அடுத்தப்படியாக, திருநெல்வேலியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் இன்று காலை 11:15 மணி முதல் 12.15 மணிவரை பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்நிகழ்ச்சிகளுக்குப் பின்னர், பிரதமர் மோடி மீண்டும் தனி ஹெலிகாப்டர் மூலம் கேரளாவின் திருவனந்தபுரத்திற்கு செல்ல உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்