உங்கள் நம்பிக்கையை பாஜக நிச்சயம் நிறைவேற்றும்… பிரதமர் மோடி உத்தரவாதம்!

Published by
பாலா கலியமூர்த்தி

PM Modi : தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று காலை தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி துறைமுகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று ரூ.17,300 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை திறந்து வைத்தும், அடிக்கலும் நாட்டியும் வைத்தார். இதில் குறிப்பாக, கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் திட்டம் உள்ளதவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.

Read More – வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது… பிரதமர் மோடி பேச்சு!

அதேசமயம் குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டி வைத்த பிரதமர் மோடி, இந்தியாவின் முதல் ஹைட்ரஜனை எரிபொருளாக கொண்ட, பயணிகள் கப்பலை கொடியசைத்து தொடங்கி வைத்தபின் உரையாற்றினார். இதன்பின் தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் நெல்லை வந்த பிரதமர் மோடி பாளையங்கோட்டையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

பிரதமருக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இவ்விழாவில் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல் முருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இதனைத்தொடர்ந்து பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, திருநெல்வேலி அல்வாவை போன்ற இனிமையான உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.  நெல்லையப்பர், காந்திமதி அம்மனுக்கு பணிவான வணக்கங்கள்.

Read More – தமிழகத்தில் 17 டி.எஸ்.பி நிலை அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம்..!

தோளோடு தோள் நின்று நடைபோடுபவர்கள் தான் தமிழர்கள். தமிழ்நாடு மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையும், விசுவாசமும் எங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம். பாஜகவை மீண்டும் ஆட்சியில் அமர வைக்க வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஒரே எண்ணமாக இருந்து வருகிறது. தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை பாஜக நிச்சயம் காப்பாற்றும் என உத்தரவாதம் அளிக்கிறேன். வருங்காலத்தை பற்றி மிக தெளிவுடன் இருப்பவர்கள் தமிழ்நாடு மக்கள்.

பாஜகவின் அணுகுமுறையும், சித்தாந்தமும் தமிழ்நாடு மக்களுடன் ஒத்துப்போகிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தமிழ்நாடு வேகமாக முன்னேறி வருகிறது. மாற்று எரிசக்தி துறையில் உலகில் முதன்மையான நாடாக இந்தியா உள்ளது. பாஜக தான் தமிழ்நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லக்கூடிய கட்சி.

Read More – விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக அறிவிப்பு!

உலகெங்கிலும் வசிக்கும் தமிழ் மக்கள், அவர்களுக்கு கிடைக்கும் மரியாதையை நினைத்து பெருமைப்படுகிறார்கள். இது மத்திய அரசின் செயல்பாடுகளால் தான் வருகிறது. வெளிநாட்டிற்கு செல்லும் இந்தியர்களை மற்ற நாட்டவர்கள் வியப்புடன் பார்க்கிறார்கள். மத்திய பாஜக அரசின் திட்டங்களால் உலகளவில் இந்திய மக்களுக்கான மரியாதை அதிகரித்துள்ளது.

மத்திய அரசு நேர்மறையான சிந்தனையோடு செயல்படுகிறது என பாஜகவின் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்த பிரதமர் மோடி, தமிழ்நாட்டு மக்களின் அன்பு எங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது என கூறினார். மேலும் கூறியதாவது, தங்கள் குடும்பத்தை வளர்ப்பதற்காகவே, சிலர் ஆட்சிக்கு வர விரும்புகிறார்கள். குடும்ப அரசியல் தான் தலைதூக்கியுள்ளது. எந்த திட்டமும் இல்லாமல் எதிர்க்கட்சிகள் உள்ளன. ஆனால், ஆட்சிக்கு வந்தால் யார் அமைச்சர் ஆவார்கள் என்ற திட்டம் மட்டும் அவர்களிடம் இருக்கிறது எனவும் குடும்ப அரசியல் குறித்து விமர்சித்தார்.

Recent Posts

ஒரே நிகழ்ச்சியில்…ஒரே வரிசையில் பாராமுகத்தில் தனுஷ்-நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்!

சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…

20 mins ago

Live : திமுக எம்பிக்கள் கூட்டம் முதல் …இந்தியா-ஆஸி. டெஸ்ட் போட்டி வரை..!

சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…

36 mins ago

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்! 80-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சிரியா : காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கும், இஸ்ரேல் நாட்டுக்கும் இடையே கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக…

57 mins ago

உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி? நாளை மறுநாள் முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக முன்னதாக தெரிவித்திருந்தனர். இதனால்,…

2 hours ago

அடுக்கப்பட்ட குற்றச்சாட்டு! அதானி குழுமம் உடனான 2 திட்டங்களை ரத்து செய்தது கென்யா!

நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…

3 hours ago

எனக்கும் முதலமைச்சர் கனவு உண்டு! திருமாவளவன் பளீச் பேச்சு!

திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…

14 hours ago