PM Modi: தமிழ்நாட்டில் எனக்கு கிடைத்த ஆதரவால் பலர் குழம்பி போயிருக்கிறார்கள் என்று நெல்லை பரப்புரையில் பிரதமர் மோடி பேச்சு.
மக்களவை தேர்தலை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகை தந்து சென்னை உள்ளிட்ட இடங்களில் வாகன பேரணி, கூட்டத்தில் பங்கேற்று தங்களது வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
இந்த நிலையில், இன்று மீண்டும் தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி பாஜக மற்றும் என்டிஏ கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை அகஸ்தியர் பட்டியில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, தமிழ்நாட்டுக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. உங்களது ஆதரவுக்கு தலை வணங்குகிறேன்.
தமிழக மக்களின் ஆதரவை கண்டு இந்தியா கூட்டணிக்கு தூக்கமே இல்லை. அதுவும் எனக்கு கிடைத்துள்ள ஆதரவால் பலர் குழம்பி உள்ளனர். தாய்மார்களுக்கு தொண்டு செய்ததால் எனக்கு அவர்களின் அன்பு கிடைத்துள்ளது. நெல்லை மண்ணில் வீரம், துணிச்சல் தான் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுநாச்சியார், முத்துராமலிங்க தேவர் ஆகியோரை தேசம் போற்றும்.
தமிழகத்தின் புராதன சின்னங்கள் உலக புகழ் பெறும். தமிழ்மொழி, தமிழ் கலாச்சாரத்தை நேசிப்பவர்கள் பாஜகவை நேசிக்க தொடங்கிவிட்டனர். தமிழ் மொழிக்கு உலக அங்கீகாரத்தை பெற்று தர பாஜகவின் தேர்தல் அறிக்கையில் உள்ளது. அதேபோல் உலக முழுவதும் திருவள்ளுவர் கலாச்சர மையம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேசத்தின் பாதுகாப்பின் தமிழகத்தின் பங்கு உள்ளது.
இந்தியா கூட்டணியில் திமுக, காங்கிரேசின் சித்தாந்தம் வெறுப்பினால் உருவாக்கப்பட்டவை. திராவிடத்தின் பெயரால் தமிழர் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் அழிக்க நினைக்கிறார்கள். திமுகவும், காங்கிரஸும் காமராஜரை தொடர்ந்து அவமதிக்கிறது. தற்போது காமராஜர் வழியில் பாஜக பயணிக்கிறது என்றார்.
மேலும் கூறியதாவது, கச்சத்தீவு விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் செய்த வரலாற்று பிழையை மன்னிக்கவே முடியாது. ஜி 20 போன்ற உலகளாவிய மாநாடுகள் மூலம் இந்தியாவுக்கு பெருமிதம் கிடைத்து வருகிறது. தேவேந்திரகுல வேளாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றியது பாஜக தான். நெல்லை – சென்னை இடையே வந்தேபாரத் ரயில் சேவையால் மக்கள் பயனடைந்துள்ளனர்.
அதுமட்டுமில்லாமல் தெற்கிலும் புல்லட் ரயில் சேவை தொடங்க திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்த பிரதமர் மோடி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர், ஜெயலலிதா குறித்தும் பேசினார். அதேபோல், கடந்த 10 ஆண்டுகளில் 1.20 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கியுள்ளோம் என பாஜக திட்டங்களை ஒவ்வொன்றாக எடுத்துரைத்தார்.
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…
திருச்சி: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்துள்ள "விடுதலை 2" இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல…
சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தது இன்னுமே…