எம்.ஜி.ஆர். உடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது! அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!

அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தவர் எம்ஜிஆர். அவருடன் மோடியை ஒப்பிடலாமா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

mgr annamalai D. Jayakumar

சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள்  இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அதிமுக கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் பலரும்   எம்ஜிஆர் சிலை மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். மேலும், வேறு அரசியல் காட்சிகளை சேர்ந்த தலைவர்களும் சமூக வலைத்தளங்களின் வாயிலாக அறிக்கைகள் வெளியிட்டு நினைவு கூர்ந்து வருகிறார்கள்.

அந்த வகையில், தமிழக பாஜக மாநில தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் எம்ஜிஆருக்கும் பிரதமர் மோடிக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளதாக அவர் கூறியது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. அண்ணாமலை வெளியிட்ட அந்த அறிக்கையில் ” டாக்டர் எம் ஜி ஆர் அவர்களுக்கும், நமது  பிரதமர்  நரேந்திர மோடி அவர்களுக்குமிடையே, பல ஒற்றுமைகளும் இருக்கின்றன. இருவருமே மிகவும் எளிய குடும்பப் பின்னணியில் பிறந்து தங்கள் நேர்மையாலும், கடின உழைப்பாலும் பொதுமக்கள் மீது கொண்ட அன்பாலும், உயர் பதவிகளுக்குச் சென்றவர்கள்.

தாங்கள் பட்ட துயரங்கள், வருங்கால சந்ததியினருக்கும் வரக் கூடாது என்பதற்காக, தங்கள் அதிகாரத்தை, ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்தியவர்கள் அமரர் எம்.ஜி.ஆர் அவர்கள் தமிழகத்தில் உள்ள சமூகம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக உழைத்தார் நமது பிரதமர் மோடி அவர்கள் நாடு முழுவதும் உள்ள பின்தங்கிய மக்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார்.எம்.ஜி.ஆர் அவர்களது உயரிய எண்ணங்கள் அனைத்தையும் இன்று நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் செயல்படுத்தி வருகிறார்” என கூறியிருந்தார்.

இதனையடுத்து, எந்த நிலையிலும் எம்.ஜி.ஆர். உடன் பிரதமர் மோடியை ஒப்பிட முடியாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் காட்டத்துடன் பேசியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் ” மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்தான் மோடிக்கும் எம்ஜிஆருக்கும். எம்ஜிஆர் அனைத்து மதத்தினரையும் சமமாக பார்த்தவர் . ஆனால், பாஜகவின் கொள்கையே மதத்தால் பிரிவினையை தூண்டுவதுதான். எனவே, எம்ஜிஆருடன் மோடியை ஒப்பிடலாமா?

பாஜகவை போல் எம்ஜிஆர் மதரீதியான அரசியல் செய்ததில்லை.சமூக நீதிக்காக மோடி என்ன செய்தார்?. எந்த நிலையிலும் எம்.ஜி.ஆருடன் மோடியை ஒப்பிட முடியாது. எம்.ஜி.ஆருடன் மோடி மட்டுமில்லை  யாரையும் ஒப்பிட முடியாது” என அண்ணாமலை பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  காட்டத்துடன் பேசியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்