கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வரிடம் தொலைபேசியில் விசாரித்த பிரதமர் மோடி.!

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், மருத்துவ நடவடிக்கைகள் குறித்தும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார்.
அப்போது, கொரோனா தடுப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாகவும், விரைவில் தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பும் எனவும் முதல்வர் கூறியுள்ளார். மேலும், ஒரு நாளைக்கு 45 ஆயிரம் பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும் முதல்வர், பிரதமரிடம் தொலைபேசியில் விளக்கமளித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025