பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் மாட்டுவண்டி , குதிரை வண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரிய வழக்கு, மாவட்ட எஸ்.பி பதிலளிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இம்மாதம் (செப்டம்பர்) 17ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது 72வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். இதற்காக பாஜகவினர் சகல ஏற்பாட்டையும் ஆரம்பித்து உள்ளனர்.
அந்த வகையில் பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலியில் மாட்டுவண்டி மற்றும் குதிரைவண்டி பந்தயம் நடத்த அனுமதி கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு கொடுக்கப்பட்டிருந்தது.
இதனை குறித்து விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, இது தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி பதிலளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. எஸ்.பி பதில் அறிக்கையை அடிப்படியாக கொண்டு அனுமதி குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…
டெல்லி : இந்தியாவின் முக்கிய மாநிலமான மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தை அடுத்த 5 ஆண்டுகளுக்கு யார் ஆள போகிறார்கள்…
இம்பால் : கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி அந்தஸ்து கோரிய மைத்தேயி சமூகத்தினருக்கும் குக்கி பழங்குடியினருக்கும் இடையே…
சென்னை : தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணையை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. முதலில்…
தென்காசி : கடந்த நவ-20 (புதன்கிழமை) இரவு முழுவதும் இடைவிடாது கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக தென்காசி…