பிரதமர் மோடி தமிழகம் வருகை!! ட்விட்டரில் மீண்டும் முதலிடத்தில் ட்ரெண்டாகும் # GoBackModi  ஹேஷ் டாக்!!

Published by
Venu
  • இன்று பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வருகிறார்.
  • பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி # GoBackModi என்ற ஹேஷ் டாக் இந்திய  அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

முதல் முறையாக # GoBackModi என்ற ஹேஷ் டாக் உலக அளவில் ட்ரெண்ட்: 

பிரதமர் நரேந்திர மோடி ராணுவ கண்காட்சியை தொடக்கி வைக்க ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழகம் வந்தார்.அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் # GoBackModi என்ற ஹேஷ் டாக் உலக அளவில் ட்ரெண்டாகியது.

இரண்டாவது முறையாக # GoBackModi என்ற ஹேஷ் டாக் உலக அளவில் ட்ரெண்ட்:

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக  பிரதமர் நரேந்திர மோடி  ஜனவரி 27 ஆம் தேதி தமிழகம் வந்தார்.

இதனால்  ஜனவரி 27 ஆம் தேதி முதலே சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் மீணடும் அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து # GoBackModi என்ற ஹேஷ் டாக் ட்ரெண்டாகி வருகிறது.அதேபோல் பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் #MaduraiThanksModi என்று ஹேஷ் டாக்கும் ட்ரெண்டாகி வருகிறது.இந்த இரு ஹேஷ் டாக்குகளும் போட்டி போட்டு ட்ரெண்டாகியது.

 

அதேபோல் சமூக வலைத்தலமான ட்விட்டரில் ஜனவரி 27 ஆம் தேதியும்  # GoBackModi என்ற ஹேஷ் டாக்கும், #GoBackSadistModi என்ற ஹேஷ் டாக்கும்,#TNWelcomesModi என்ற ஹேஷ் டாக்கும் போட்டி போட்டு ட்ரெண்டாகியது.ஆனால் # GoBackModi என்ற ஹேஷ் டாக் தான் உலக அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகியது.

மூன்றாவது முறையாக # GoBackModi என்ற ஹேஷ் டாக் உலக அளவில் ட்ரெண்ட்:

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

அதேபோல் திருப்பூருக்கு கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி பிரதமர்  மோடி வருகை தந்தார்.இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து  #GOBACKMODI என்ற ஹேஷ்டக் மூன்றாவது முறையாக உலக அளவில் ட்ரெண்டாகியது .

மீண்டும்  #GoBackModi என்ற ஹேஷ் டாக் இந்திய அளவில் ட்ரெண்ட்:

இந்நிலையில் இன்று அரசு விழாவிற்காக பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகிறார்.

பின்னர் அவர் மதுரை – சென்னை தேஜஸ் விரைவு ரயில் சேவையை தொடங்கிவைக்கிறார்.

இந்நிலையில் சமூக வலைதளமான ட்விட்டரில் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி # GoBackModi என்ற ஹேஷ் டாக் இந்திய  அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

Published by
Venu

Recent Posts

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

1 hour ago

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

1 hour ago

வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…

2 hours ago

பாக்சிங் டே டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி பேட்டிங்., அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…

3 hours ago

பாலியல் வன்கொடுமை வழக்கு : கைதான ஞானசேகரனுக்கு மாவு கட்டு., நீதிமன்ற காவல்!

சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…

3 hours ago

சென்னை, காஞ்சிபுரம் 10 மணி வரை இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…

14 hours ago