பிரதமர் மோடி தமிழகம் வருகை!! ட்விட்டரில் மீண்டும் முதலிடத்தில் ட்ரெண்டாகும் # GoBackModi ஹேஷ் டாக்!!
- இன்று பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வருகிறார்.
- பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி # GoBackModi என்ற ஹேஷ் டாக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.
முதல் முறையாக # GoBackModi என்ற ஹேஷ் டாக் உலக அளவில் ட்ரெண்ட்:
பிரதமர் நரேந்திர மோடி ராணுவ கண்காட்சியை தொடக்கி வைக்க ஏப்ரல் 12 ஆம் தேதி தமிழகம் வந்தார்.அப்போது பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் # GoBackModi என்ற ஹேஷ் டாக் உலக அளவில் ட்ரெண்டாகியது.
இரண்டாவது முறையாக # GoBackModi என்ற ஹேஷ் டாக் உலக அளவில் ட்ரெண்ட்:
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 27 ஆம் தேதி தமிழகம் வந்தார்.
இதனால் ஜனவரி 27 ஆம் தேதி முதலே சமூக வலைத்தளமான ட்விட்டர் பக்கத்தில் மீணடும் அவர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து # GoBackModi என்ற ஹேஷ் டாக் ட்ரெண்டாகி வருகிறது.அதேபோல் பிரதமர் நரேந்திர மோடிக்கு வரவேற்பு அளிக்கும் வகையில் #MaduraiThanksModi என்று ஹேஷ் டாக்கும் ட்ரெண்டாகி வருகிறது.இந்த இரு ஹேஷ் டாக்குகளும் போட்டி போட்டு ட்ரெண்டாகியது.
அதேபோல் சமூக வலைத்தலமான ட்விட்டரில் ஜனவரி 27 ஆம் தேதியும் # GoBackModi என்ற ஹேஷ் டாக்கும், #GoBackSadistModi என்ற ஹேஷ் டாக்கும்,#TNWelcomesModi என்ற ஹேஷ் டாக்கும் போட்டி போட்டு ட்ரெண்டாகியது.ஆனால் # GoBackModi என்ற ஹேஷ் டாக் தான் உலக அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகியது.
மூன்றாவது முறையாக # GoBackModi என்ற ஹேஷ் டாக் உலக அளவில் ட்ரெண்ட்:
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதேபோல் திருப்பூருக்கு கடந்த பிப்ரவரி 10 ஆம் தேதி பிரதமர் மோடி வருகை தந்தார்.இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து #GOBACKMODI என்ற ஹேஷ்டக் மூன்றாவது முறையாக உலக அளவில் ட்ரெண்டாகியது .
மீண்டும் #GoBackModi என்ற ஹேஷ் டாக் இந்திய அளவில் ட்ரெண்ட்:
இந்நிலையில் இன்று அரசு விழாவிற்காக பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகிறார்.
பின்னர் அவர் மதுரை – சென்னை தேஜஸ் விரைவு ரயில் சேவையை தொடங்கிவைக்கிறார்.
இந்நிலையில் சமூக வலைதளமான ட்விட்டரில் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி வருகையையொட்டி # GoBackModi என்ற ஹேஷ் டாக் இந்திய அளவில் முதலிடத்தில் ட்ரெண்டாகி வருகிறது.