பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட மதுரை வந்தடைந்தார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது தென் தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இதையடுத்து, தமிழக அரசின் ஆக்கப்பூர்வமான முயற்சியால் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இதற்காக ஆயிரத்து 264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. 750 படுக்கை வசதிகள், 100 மருத்துவ படிப்பிற்கான இடங்களும் ஏற்படுத்தப்பட உள்ளன. இந்தநிலையில், எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா, மதுரை மண்டேலா நகரில் இன்று பிரமாண்டமாக நடைபெறுகிறது.
விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதற்காக அவர், டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.அடிக்கல்நாட்டு விழாவையடுத்து பாஜகவின் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
பிரதமரின் வருகையையொட்டி மதுரை முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மதுரையில் டிஜிபி ராஜேந்திரன் தலைமையில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு, 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…
சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…