ஒரே மேடையில் பிரதமர் மோடி – முதல்வர் மு.க.ஸ்டாலின்.! திருச்சி பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்.!
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஜனவரி மாதம் 2ஆம் தேதி திருச்சி விமான நிலையத்தில் புதியதாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள விமான நிலைய முனையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ஒன்றாக பங்கேற்க உள்ளனர் என ஏற்கனவே கூறப்பட்டு இருந்தது.
இந்த விழாவுக்கு வருகையில் , திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிலும் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒன்றாக பங்கேற்க உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2021க்கு பிறகு முடித்த பல்கலைக்கழக மாணவர்களுக்கு இன்னும் பட்டம் வழங்கப்படாமல் இருக்கிறது.
சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது..!
பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு தற்போது 2021க்கு பின் முடித்த அனைத்து மாணவர்களுக்கும் பட்டம் வழங்கப்பட உள்ளது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் 130 கல்லூரிகள் உள்ளன . அதில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேலான மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படாமல் உள்ளது. அதில் ஜனவரி 2ஆம் தேதி விழாவில் பங்கேற்க, 236 மாணவர்களுக்கும் ( பல்வேறு துறையில் முதலிடம், இரண்டாமிடம் பிடித்த மாணவர்கள்), 1272 டாக்ட்ரேட் முடித்த மாணவர்களுக்கும் என மொத்தமாக 1528 மாணவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதல்வர், பிரதமர் அரங்கில் மொத்தம் 600 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் மீதம் உள்ள மாணவர்களுக்கு வேறு அரங்கில் இருந்து விழாவை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. விழா நடைபெறும் ஜனவரி 2ஆம் தேதி காலை 10.30 மணியளவில் பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பின்னர் விமான நிலைய முனையம் திறப்பு விழாவுக்கு செல்வார்கள் என கூறப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரே நிகழ்வில் அடுத்தடுத்து கலந்து கொள்ள உள்ளதால் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.