தமிழ் பண்பாட்டின் முதல் எதிரி.. திமுக ஒரு அரக்கன்.! பிரதமர் மோடி ஆவேசம்.!

PM Modi

PM Modi மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால், நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நேரடியாக சென்று தேர்தல் பிரச்சார வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த வருடத்தில் மட்டும் இன்றோடு சேர்த்து 5வது முறையாக பிரதமர் மோடி தமிழகம் வந்துள்ளார்.

இன்று கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசுகையில், திமுக காங்கிரஸ் கூட்டணி, ஆளும் திமுக அரசு, காங்கிரஸ் அரசு , இந்தியா கூட்டணி ஆகியவை பற்றி தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

Read More – மக்களவை தேர்தல் தேதி… முக்கிய அறிவிப்பு.!

அதில், ‘இந்தியா (I.N.D.I.A)’ கூட்டணி ஊழல் செய்ய தான் போராடுகிறது. தமிழ்நாட்டிடல் இந்தியா கூட்டணி எடுபடாது. தமிழ்நாட்டில் திமுக குடும்ப ஆட்சியை வீழ்த்த வேண்டும். திமுக -காங்கிரஸ் கூட்டணியை துடைத்து எறியவேண்டும். தமிழகத்தில் பாஜக ஆட்சியை அமைப்போம்.

பாஜக ஆட்சியில் 5ஜி கொண்டு வந்தோம். ஆனால், திமுக – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் 2ஜி ஊழல் தான் நடைபெற்றது. பாதுகாப்புதுறையில் கூட ஊழலில் ஈடுப்பட்டது காங்கிரஸ். பாஜக கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை நடத்துகிறது. அவர்கள் (காங்கிரஸ்) காமன்வெல்த் போட்டியில் ஊழல் செய்கிறார்கள். கன்னியாகுமரி – திருவனந்தபுரம் சிறப்பு வழித்தடம் அமைக்க பல வருடங்களாக கோரிக்கை வைத்து வந்தனர் அப்பகுதி மக்கள். ஆனால், அதனை செய்து கொடுத்தது பாஜக அரசு.

Read More – இந்த வருடத்தில் 5வது முறை.! பிரதமர் மோடியின் இன்றைய தமிழக பயணம்.! 

பாஜக அரசு கன்னியாகுமரியை நேசிக்கிறது. திமுக – காங்கிரஸ் கட்சி கன்னியாகுமரியை வஞ்சிக்கிறது. ஒரு நாட்டில் துறைமுகம் வளர்ந்தால் மட்டுமே நாடு முழுவதும் வளர்ச்சி ஏற்படும். அதனை கருத்தில் கொண்டே துறைமுக முன்னேற்றத்திற்கு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறோம். தூத்துக்குடி துறைமுகத்தை மேம்படுத்த அதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் நலனை கருத்தில் கண்டே பாஜக அரசு துறைமுகங்களை புதுப்பித்து வருகிறது. அதே போல, 15 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களை தமிழகத்தில்  பாஜக செயல்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஒரு அரக்கனாக செயல்பட்டு வருகிறது. சனாதானத்திற்கு எதிராக பேசியவர்களுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. தமிழ் பண்பாட்டின் ஒரே எதிரி திமுக தான். அயோத்தியில் ராம் பிரதிஷ்டா விழா நடைபெறும் போது தமிழகத்தில் உள்ள பழமையான கோயில்களுக்கு சென்று நான் பூஜை செய்தேன் . ஆனால், தமிழகத்தில் அதனை காணொளி மூலம் பாக்க கூட யாருக்கும் அனுமதியில்லை. தமிழ் பண்பாட்டின் மீது வெறுப்பினை கக்கி கொண்டு இருக்கிறது திமுக. தமிழ் பண்பாட்டின் முதல் எதிரி திமுக. திமுக தமிழகத்தின் அரக்கன்.

Read More – சில நாட்களுக்கு முன் ‘அந்த’ பெண் என் வீட்டிற்கு வந்தார்.! பாலியல் குற்றசாட்டுக்கு எடியூரப்பா பதில்.

திமுக – காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. பாஜக அரசு அதனை மீண்டும் கொண்டு வந்தது எனவும் பிரதமர் மோடி இன்றைய கன்னியகுமாரி விழாவில் பேசினார்.  மேலும், கன்னியாகுமரியில் இப்படி ஒரு ஆதரவை பார்த்து டெல்லியில் உள்ளவர்களுக்கு தூக்கம் கெட்டுப்போச்சி. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் பாஜக அலைதான் அடித்து கொண்டிருக்கிறது எனவும் இன்றைய விழாவில் பிரதமர் மோடி உரையாற்றினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
Heavy Rain - cyclone
meena (10) (1)
Red Alert - Heavy Rains
Tamilnadu Speaker Appavu
parliament winter session 2024
Allu Arjun in chennai