மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் அறிவித்திருப்பது நிம்மதி அளிக்கிறது.
பிரதமர் மோடி அவர்கள், மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், போராடி வென்ற விவசாயிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், டிடிவி தினகரன் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் அறிவித்திருப்பது நிம்மதி அளிக்கிறது. குளிர்,வெயில்,மழை என எதையும் பொருட்படுத்தாமல் உயிர்த்தியாகங்கள் செய்து விவசாயிகள் நடத்திய அறவழிப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது!
இதற்காக ஓராண்டு காலமாக போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்யவேண்டும். இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் வேளாண்மை சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது விவசாயிகளை முழுமையாக கலந்தாலோசித்து அவர்களின் தேவைக்கேற்ப ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும்.
மேலும், தமிழக விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தப் போவதில்லை என்ற உறுதியான முடிவையும் மத்திய அரசு எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…